The historic Tamil Nadu Legislative Assembly has crossed 100 years and has a
long standing tradition. All legislative debates from 1921 to present date are
documented as debate books and maintained in the Legislative Assembly
Library. In order to bring these legacy debates and discussions to the people for
easy access, which include the speeches given by important leaders, laws
enacted, and schemes introduced for the welfare of the people, the Hon'ble Chief
Minister Mr. M.K. Stalin issued a notification for the Digitization of the Records
of the Legislature on 13-8-2021.
more...
About the Digital Repository
The historic Tamil Nadu Legislative Assembly has crossed 100 years and has a long standing tradition. All legislative debates from 1921 to present date are documented as debate books and maintained in the Legislative Assembly Library. In order to bring these legacy debates and discussions to the people for easy access, which include the speeches given by important leaders, laws enacted, and schemes introduced for the welfare of the people, the Hon'ble Chief Minister Mr. M.K. Stalin issued a notification for the Digitization of the Records of the Legislature on 13-8-2021. This project is implemented by the Tamil Nadu e-Governance Agency. Documents such as the debates of the Legislative Council and Legislative Assembly from 1921 to present, Publications from the Legislative Assembly, Reports placed in the Legislative Assembly, Reports of the Committees, Bills, News Clippings related to the events of the Legislative Assembly are exclusively scanned, OCR-ed and hosted in this website. The search facility is available both in both English and Tamil languages and is well designed so to use even by those who don't know Tamil typing. Advanced search enables to easily retrieve documents by factors such as assembly number, date, assembly business, and assembly members. Also, audio and video compilations of important debates in the Legislative Assembly and Photographs have also been uploaded in this website. Through this website, People's Representatives, Researchers, Academicians and People all over the world can easily search and get the references they need. The Records of the Tamil Nadu Legislature are digitally uploaded and made available for public use through this website so that historic documents can be used by future generations.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றம் 100 ஆண்டுகளைக் கடந்து நீண்ட பாரம்பரியம் மிக்க சட்டமன்றமாகத் திகழ்கிறது. 1921 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற விவாதங்களும், நடவடிக்கைக் குறிப்புகளாக ஆவணப்படுத்தப்பட்டு சட்டமன்ற நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெருந்தலைவர்கள் ஆற்றிய உரைகள், இயற்றப்பட்ட சட்டங்கள், மக்கள் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்புமிக்க இந்த விவாதங்களை, மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் வண்ணம், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில், 13-8-2021 அன்று சட்டமன்ற ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டார். இத்திட்டம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு, 1921 முதல் தற்போது வரையிலான சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற பேரவை குறிப்புகள், சட்டமன்ற விழாக்கள் தொடர்பான வெளியீடுகள், சட்டமன்றத்தில் வைக்கப்பெற்ற ஏடுகள், சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள், சட்ட முன்வடிவுகள், சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான செய்தி துணுக்குகள் போன்ற ஆவணங்கள் பிரத்தியேகமாக ஸ்கேன் செய்யப்பட்டு, இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வலைதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேடும் வசதி, தமிழ் தட்டச்சு தெரியாதவர்களும் பயன்படுத்தும் வண்ணம் சிறப்பாகவும் மிக எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரவை எண், தேதி, சட்டமன்ற அலுவல், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற காரணிகள் மூலம் மேம்பட்ட தேடுதலை மேற்கொண்டு வேண்டிய ஆவணங்களை எளிதில் பெறலாம். மேலும் சட்டமன்ற பேரவையில் நடைபெறும் முக்கிய விவாதங்களின் ஒலி ஒளி தொகுப்புகள், புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களும் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்கு தேவையான குறிப்புகளைத் தேடி எளிதாக பெற முடியும். வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை நாளைய தலைமுறையும் பயன்படுத்தும் வண்ணம் சட்டமன்ற ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு இந்த வலைதளத்தின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்படுகிறது